பாதிக்கப்பட்டவர்களுக்காக
நீங்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறீர்களா? அதன் காரணமாக நம்பிக்கை இழந்து யாரை அணுகுவது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?
வன்முறையற்ற வாழ்க்கை வாழ நம் அனைவருக்கும் உரிமை உள்ளது. வன்முறையில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல வழிகள் உள்ளன. அதற்கான ஆலோசனை மற்றும் உதவியினை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
தெர் தே ஃபாமினால் உங்களுக்கு உதவ இயலும்.
நீங்கள் ஒரு அனுபவமிக்க, துறைவல்லுனரான பெண்மணியிடம் இருந்து கட்டணமில்லா ஆலோசனை பெறலாம்.
நாங்கள் உங்கள் தாய் மொழியிலோ அல்லது மொழிபெயர்ப்பாளரின் உதவி மூலமோ உங்களுக்கு ஆலோசனை வழங்குவோம்
உங்களுக்கு அருகாமையிலேயே ஒரு பொருத்தமான ஆலோசனை மையத்தினை சிபாரிசு செய்வோம்.
நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
மேலும் உங்கள் பெயரைத் தெரியப்படுத்தாமலும் (அநாமதேய) ஆலோசனைகளைப் பெறலாம்.
அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்
24-மணி நேர உதவித் தொலைபேசி எண்கள்
117 Polizei (காவல்துறை)
147 Beratung für Kinder und Jugendliche (சிறுபிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆலோசனை)
பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையங்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையங்கள்
திங்கள் முதல் புதன் வரை 14.00 – 16.00
076 725 91 21
மின்னஞ்சல்
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு
உங்கள் நெருங்கிய வட்டத்திலிருந்து பாலின ரீதியில் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வழி குறித்து உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம். மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக ஆலோசனை அளிக்கிறோம். இது ஒரு கட்டணமில்லா ஆலோசனையாகும்.
கீழ்க்காணும் நபர்களுக்கு ப்ராவா ஆலோசனை அளிக்கிறது
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு;
நண்பர்கள் மற்றும் நண்பிகளுக்கு;
மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பிற நபர்களுக்கு.
ப்ராவா உங்களுக்கு கீழ்க்காணும் உதவிகளை அளிக்கிறது
பின்னணித் தகவல்கள்;
சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை;
உங்கள் பகுதியில் உள்ள உதவி மையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
மின்னஞ்சல்
தொலைபேசி வாயிலாக ஆலோசனை
செவ்வாய் முதல் வியாழன் வரை 14.00 – 16.00
076 725 91 21
துறை வல்லுனர்களுக்காக
உங்கள் தொழில் ரீதியான வட்டத்திலிருந்து பாலின ரீதியில் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வழி குறித்து உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம். மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக ஆலோசனை அளிக்கிறோம். இது ஒரு கட்டணமில்லா ஆலோசனையாகும்.
கீழ்க்காணும் நபர்களுக்கு ப்ராவா ஆலோசனை அளிக்கிறது
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு;
இளைஞர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வல்லுனர்களுக்கு;
பணி அளிப்பவர்களுக்கு;
பிற வல்லுனர்களுக்கு.
ப்ராவா உங்களுக்கு கீழ்க்காணும் உதவிகளை அளிக்கிறது
பின்னணித் தகவல்கள்;
சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை;
உங்கள் பகுதியில் உள்ள உதவி மையங்களுடன் துறை ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
மின்னஞ்சல்
தொலைபேசி வாயிலாக ஆலோசனை
செவ்வாய் முதல் வியாழன் வரை 14.00 – 16.00
076 725 91 21